
குச்சவெளி பிரதேசத்தின் கன்னியா-நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்திலேயே இந்த புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் திணைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார்.
கண்டுபடிக்கப்பட்ட மயானமானது சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்று கணிக்க கூடியவாறு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
குறித்த மயானத்தில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் இருந்தன. இவை புதையலுக்காக தோண்டப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டார்.
