
ஹிந்து சேனா அமைப்பு டெல்லி நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஹிந்துக்களுக்கு எதிரான கருத்தினை தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்து பல கட்சிகளினதும், தலைவர்களினதும் கண்டனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், அவர் மீதான குறித்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
