ஷிரின் கஞ்ச்வாலா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ‘இன்டர்நெட் பசங்க’ என்ற முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை சுது விக்னேஷ்காந்த் எழுதியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் இத்திரைப்டம் எதிரிவரும் ஜூன் 14ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.






