சமூகவலைத்தளங்களில் #Pray_for_Neasamani என்ற ஹேஸ்டேக்கானது ட்ரெண்ட்டாகி வருகின்றது.நடிகர் வடிவேலு நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியே தற்போது ட்ரெண்ட்டாகி வருகின்றது. அத்திரைப்படத்தில் அவரது தலையில் சுத்தியல் விழும் அந்த காட்சியை வைத்து தற்போது சமூகவலைத்தளத்தில் சுத்தியல் ஒளிப்படத்தை பதிவிட்டு, ”உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்’ என`Civil Engineering Learners’ என்கிற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
அதற்கு கீழே பதிலளித்த இளைஞர், ”இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால் தான் உடைந்தது. ஜெமீன் அரண்மனையில் அவருடைய மருமகனால் தான் இது நடந்தது” என பதிவிட்டிருந்தார்.அதனைத் தொடர்ந்து அவர், அந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரத்திற்காக பிராத்தனை செய்யுமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.
பிரண்ட்ஸ் படத்தில் வரும் இந்த காட்சியினை அப்படியே கமெண்டாக பதிவிடப்பட்டிருப்பதை பார்த்த இணையதளவாசிகள் விளையாட்டாக ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.
நேற்று இரவு இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டான இந்த ஹேஷ்டேக் தற்போது உலகளவில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனை பார்க்கும் ஏனைய மொழி பேசும் இணையதளவாசிகள் என்னவென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.எனினும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துகொண்டே மீம்ஸ் போடும் பல இளைஞர்களும், இணையளவாசிகளை சிரிக்க வைப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை பயன்படுத்துவது வழக்கமாகும்.





