
முதலாவது பிள்ளை பிறந்த பின்னர் தமக்கு பிள்ளைகள் பிறக்கவில்லையென அவர்கள் வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரியிடம் இந்த குறைபாட்டினை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கியுள்ளனர்.
வாரியபொல மற்றும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த முறையே 32, 29 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு முறைபாடு செய்துள்ளனர்.
திருமணமாகி குறுகிய கால இடைவெளியில் தாம் கருவுற்று முதலாவது குழந்தையை குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மூலம் பிரசவித்த பின்னர் தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்றும் குறித்தப் பெண்கள் தமது முறைபாட்டின் மூலம் தெரிவித்துள்ளனர்.
இவர்களது முறைபாட்டை பதிவு செய்த வைத்தியசாலை நிர்வாகம், இவர்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இப்பெண்களின் விருப்பத்துடன் நாளை சோதனை செய்யவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.
குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி 8,000 பெண்களிற்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், அவர் முறையற்ற விதமாக சொத்து சேகரித்தமை தொடர்பாக விசாரணை நடத்துவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வைத்தியர் சேகு சியாப்தீனால் சட்டவிரோதமாக குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டவர்கள் இருப்பின் முறைப்பாட்டை முன்வைக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
