இதன்போது, இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடி, வறுமையை ஒழிப்பதில் இருநாடுகளும் கூட்டாக பாடுபட வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை இன்றும் இம்ரான் கானிடம் வலியுறுத்தினார்.
மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளங்கள் நிலவுவதற்கு வன்முறை மற்றும் பயங்கரவாதமற்ற சூழ்நிலையும், நம்பிக்கையுணர்வும் மிகவும் முக்கியம் என்றும் மோடி இதன்போது அறிவுறுத்தினார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் பாரிச விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றார். இந்த சூழலில் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாகிஸ்தானை பிரதமர் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
