
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் குறித்த 13 உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர்.
இந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியெற்பு நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற சபையில் வெற்றிடமாகவிருந்த 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியிருந்தது. அ.தி.மு.க. 9 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் தி.மு.க. உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
