கனடாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதனாலேயே, கனடாவின் நெடுஞ்சாலை 401, இஸ்லிங்டன் அவென்யூ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





