அரசியல்வாதிகள் மற்றும் சமயம் தொடர்பிலான அடையாளங்களை அணிந்துகொள்வதை மூன்றில் ஒரு பஙகு கனேடியர்கள் விரும்பவிலலை என்று அண்மையில் மேற்கொள்ளப்படட கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று காட்டுகிறது.
குறிப்பாக மத்திய, மாநில, உள்ளூராட்சி அரசியல்வாதிகள் முக்காடுகளையோ, சிலுவை அடையாளங்களையோ, தலைப்பாகையையோ அல்லது அவற்றினை ஒத்த மத அடையாளங்களோ தமது கடமை நேரங்களில் அணியக்கூடாது என்று, இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலான கியூபெக் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மத அடையாளங்களை அணிவதை தடை செய்ய வேண்டும் என்பதனை தேசிய அளவில் 37 சதவீதம் பேர் ஆதரித்துள்ள போதிலும், அவ்வாறு தடை செய்யக்கூடாது என்று 49 சதவீதம் பேர் கருத்து வெளியிட்டு்ள்ளனர்.
அதிகாரத்தில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தின் போது இவ்வாறான மத அடையாளங்களை அணிந்து கொள்வதனைத் தடை செய்யும் சட்டத்திற்கான முன்மொழிபு ஒன்று கியூபெக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், அதனை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே இவ்வாறான முடிவு பெறப்பட்டுள்ளது.
