இங்கிலாந்து முழுவதும் ஒரு வாரகாலமாக பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் வன்முறை குழுக்களுடன் தொடர்புடைய 500 ஆண்கள் மற்றும் 86 பெண்கள் உட்பட 586 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வயதானவர்களை போதைப்பொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தும் குழுக்களை இலக்குவைத்தே இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மே 13 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது சுமார் £231000 மதிப்புள்ள போதைப்பொருள், £312649 பணம் மற்றும் 46 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ஆபத்தான நிலையிலிருந்த 364 சிறுவர்கள் உட்பட சுமார் 900 பேர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் மனிதக்கடத்தல் அல்லது அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





