LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 20, 2019

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் 122 தெருவில் 78 அவென்யூ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தானநிலையில் சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்கு உகாண்டாவில் படகு மூழ்கியதில் இதுவரை 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பலர் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு உகாண்டா மாவட்டத்தின் ஹோய்மா பகுதியில் இருந்து சுமார் 50 ற்கும் மேற்பட்ட காற்பந்து வீரர்களையும் ரசிகர்களையும் ஏற்றிச்சென்ற படகே நேற்று (ஞாயிறுக்கிழமை) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள் அங்கிருந்த பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் 32 பேர் மீட்கப்பட்டனர் என அந்நாட்டு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
மேலும் இந்த படகில் சென்றவர்கள் உயிர்காக்கும் அங்கிகளை அணியவில்லை எனவும், தொடர்ட்ந்தும் மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில், உகாண்டா மற்றும் காங்கோ எல்லையோடு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கால்பந்து அணியின் 30 உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7