
பிரிடிஷ் கொலம்பியா- லேக் கவுண்டி; கிரே மோன்க் தோட்டத்தில் அமைந்துள்ள குறித்த வயின் நிறுவனத்தில் உள்ள கழக உறுப்பினர்களான 70 பேரின் கடன் அட்டை தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
பணியாளர் ஒருவர் கவனக்குறைவாக, எக்ஸெல் விரிதாள் மூலம் வாடிக்கையாளரின் முழு பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் கடன் அட்டை எண்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர் தகவலை அனுப்பியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் கொண்டுள்ள ஒக்கனகன் வயின் நிறுவனம், இதுகுறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
