
தண்டனை விதிக்கப்பட்ட இந்தநபர் ஈரானில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் பணிபுரிந்தவரென ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய உளவுத்துறையுடனான தனது தொடர்பை குறித்தநபர் ஒப்புக்கொண்டதன் பின்னரே தண்டனை விதிக்கப்பட்டதாக ஈரான் நீதித்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் கவுன்சில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பிரித்தானியாவுடனான கலாசார மற்றும் கல்வி தொடர்புகளை வளர்ப்பதற்காக செயற்படும் நிறுவனமாகும்.
உள்ளூர் அதிகாரிகளின் தொடர் இடையூறுகள் காரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2009 ஆன் ஆண்டில் கவுன்சில் ஈரானில் அதன் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய நிறுவனங்களில் பணிபுரியும் ஈரானியர்கள் தொந்தரவு செய்யப்படுவது ஈரானில் பலவருடங்களாக இடம்பெற்றுவரும் ஒரு விடயமாகும்.
