LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 13, 2019

செவ்வாய் தோஷம் விலக நீராஞ்சன தீபம் ஏற்றுங்கள்!

———- நமசிவய வாழ்க ———-

செவ்வாய் தோஷம் விலக திருகோணமலையில் உள்ள லக்ஷ்மி நாராயணர்ருக்க்கு நீராஞ்சன தீபம் ஏற்றி வழிபட்டு நிவாரணம் பெற்றுகொள்ளுங்கள்.

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்களை எடுத்தார்.

அவற்றில்தனிச்சிறப்புபெற்றது நரசிம்ம அவதாரம். அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர்.

இரண்யன் என்னும் அசுரன், தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டுமென உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான்.

பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற
திருவுளம் கொண்டார் திருமால். தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார்.

“உன் ஹரி எங்கே இருக்கிறான்?” என்று அவன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனவர், உலகிலுள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட தன்னை வியாபித்துக் கொண்டார். இவ்வாறு, பக்தனுக்காக பதறிப்போய் தன்னை பரப்பிக் கொண்ட திவ்ய அவதாரம் நரசிம்மவதாரம்.

இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர். இரண்யனை தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். அவரது உக்ரத்தைத் தணிக்க லட்சுமிபிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அதுமுதல் அவர் "லட்சுமி நரசிம்மர்' என பெயர் பெற்றார். அந்த லட்சுமி நரசிம்மரின் அம்சமே இந்த லட்சுமி நாராயணர்.

செவ்வாய் தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தி அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் கொடுத்து பூசை செய்யுங்கள்.

பூசை செய்து வழிபடும் முறை:
ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமண தடை விலகும் கடன் பிரச்னை, நீதிமன்ற வழக்கு பிரச்னை, வீடு, நிலம் பிரச்னைகள் தீரும் , அத்தோடு வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்து வழிபடுங்கள்.

எந்தக் குறை ஏற்பட்டாலும், அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை கொண்டு  திருகோணமலையில் உள்ள தாய் லக்ஷ்மியையும் பகவான் நாராயணரிடமும் கண்ணீர் வடித்து, உருக்கமாக வேண்டி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

சங்கரன் ஜெய சங்கரன்❤️
    சிவனடியன் 🙏

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7