மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவி திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரணியில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று நாட்டு பாதுகாப்பு மீது அக்கறை வந்துள்ளது. தேர்தலுக்கு முன் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர்.
தேர்தல் வந்தால் மட்டுமே தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் முடிந்தால் இந்தியாவில் இருக்க மாட்டார்.
வாக்குறுதியளித்த படி ஒவ்வொருவர் வங்கிக்கணிக்கிலும் மோடி ரூ.15 இலட்சம் செலுத்தி உள்ளாரா? பொய் வாக்குறுதிகளை அளிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் அவர்.
ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் நரேந்திர மோடி அதிர்ச்சியில் உள்ளார். தமிழகத்திற்கு மீண்டும் பல நலத்திட்டங்கள் கிடைத்திட மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியின் சாதனையே.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் தபால் வாக்குகளை தி.மு.க கூட்டணிக்கு அளிக்க வேண்டும். ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 உதவித்திட்டத்திற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டிய நாள் தான் ஏப்ரல் 18 ஆம் திகதி. மக்கள் உணர்வுகளைப் பார்க்கும் போது 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.