LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 7, 2019

விளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் தேர்தல் ஆணையகம்

தேர்தல் மற்றும் அதற்கு முதல் நாளில் முன் அனுமதி
யின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், பொது கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், முதற்கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி தொடங்குகிறது. பின் தொடர்ந்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் திகதி நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7