LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 24, 2019

2028இற்குள் பாலின சமத்துவத்தை அடையலாம்: ஐ.நா. செயலர்

எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடையும் இலக்கினை வெற்றிகொள்ளலாம் என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதற்கு ஐ.நா. பூரண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

டாவோஸில் இடம்பெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். குறித்த இலக்கை அடைவதற்கான திட்டத்தை ஐ.நா. கொண்டுள்ளதென்றும் குறிப்பிட்டார்.

பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே பல அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றதென ஐ.நா. செயலர் இதன்போது சுட்டிக்காட்டினார். உலகளாவிய ரீதியில் ஐ.நா.வின் பிரதிநிதிகள் இதுதொடர்பாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அந்தவகையில், 2028ஆம் ஆண்டுக்குள் இதன் இலக்கை எட்ட முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7