இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேனனுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டில் தாம் ஆரம்பித்த மனநல சுகாதார பிரச்சாரத்தில் இணைவதற்கு ஆரம்பத்தில் எந்தவொரு பிரபலங்களும் முன்வரவில்லை என இளவரசர் வில்லியம் நேற்று தெரிவித்தார்.ஹெட்ஸ் டுகெதர் (Heads Together) என அழைக்கப்படும் இப்பிரசாரத்தில் இணைவதற்கு தாம் பலரையும் அணுகியதாகவும் ஆனால் இப்பிரசாரம் மனநல ஆரோக்கியம் பற்றியது என்பதால் எவரும் ஆதரவு வழங்க முன்வரவில்லையெனவும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார அரங்கின் குழு ஒன்றில் பேசிய அவர் கூறினார்.
வான்வழி அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றியபோது தமக்கு நேர்ந்த அதிர்ச்சியை கையாள்வதில் அவரது அனுபவங்கள் குறித்தும் இளவரசர் வில்லியம் மனம்திறந்து பேசினார்.
மேலும் பிரித்தானிய ஆண்கள் மனஅழுத்தம் குறித்து மனம்திறந்து பேசவேண்டும் என வலியுறுத்திய இளவரசர் மனநல ஆரோக்கியம் பற்றி பேச உலகத்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மனநல ஆரோக்கியம் குறித்து மனம்திறந்து பேசியதற்காக இளவரசர் வில்லியமுக்கு சக குழு உறுப்பினரான நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் பாராட்டு தெரிவித்தார்.





