முந்தைய பேரரசின் அதிர்ச்சி விலகலை தொடர்ந்து மலேசியாவின் புதிய மன்னராக அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அதன்படி, மலேசியாவின் புதிய மன்னராக அப்துல்லா சுல்தான் எதிர்வரும் 31ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னராக இன்று (வியாழக்கிழமை) தெரிவுசெய்யப்பட்டுள்ள அப்துல்லா சுல்தான் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றியவராவார்.
மலேசியாவின் மன்னராக கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6ஆம் திகதி பதவி விலகினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தெரிவுசெய்யப்படுகின்ற நிலையில், இவ்வாறு மன்னரொருவர் இரண்டு வருடங்களுக்குள் பதவி விலகியமை வரலாற்றில் முதல் முறையாகும். இவரது திடீர் பதவி விலகலுக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.





