வின்ட்சர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட, தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் $ 800,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.வின்ட்சர் பகுதியிலுள்ள மெனார்ட் தெருவின் 9700 தொகுதிகளில் உள்ள ஒருவரது வீட்டிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் காயமடைந்ததுடன் $800K மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.
காயமடைந்த குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





