அம்ஹெஸ்ட்பேர்க் மேயர் அல்டோ டிகார்லோ, வின்ட்சர் பொலிஸ் சேவை சபையின் உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.இவரது பதவியேற்பு நிகழ்வு நீதியரசர் லோய்ட் டீன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
தனது பதவியேற்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அல்டோ டிகார்லோ, கனடாவிலுள்ள பாதுகாப்பான இடமாக அம்ஹெஸ்ட்பேர்க்-ஐ மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவருடனும் சேர்ந்து தானும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கனடாவிலுள்ள பாதுகாப்பான இடம் என்ற தரவரிசை பட்டியலில் அம்ஹெஸ்ட்பேர்க்-ஐ அடுத்த ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டில் முதலிடத்தில் அல்லது முதலிடத்தை நெருங்கும் நிலைக்கு கொண்டு செல்வதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.





