நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிசி அவசியம்
என்ற நோக்குடன் பாடசாலை ஆசிரியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையத்தின்
ஒருவருட நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மற்றும் வின்செட்
மகளிர் தேசிய பாடசாலை விளையாட்டுத்துறை ஆசிரியர்களான கஜேந்திரன் திரிசாந்த்
மற்றும் மிதுசாலினி அரவிந்த் ஆகியோரினால் பெண்களின் நோயற்ற வாழ்வுக்கு உடற்பயிசி அவசியம் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையத்தின் ஒருவருட
நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கிறிஸ்தவ சங்க
மண்டபத்தில் நடைபெற்றது
பெண்களின் மண அழுத்தத்ம் ,உடல் வலிமை ,உடல் ஆரோக்கியம் ,பேணும்
வகையில் அரச அலுவலகங்களில் கடமை புரியும் பெண் அரச உத்தியோகத்தர்கள் , ஆசிரியர்களின்
உடற்பயிசியின் பேணும்வகையில் பிட் போர் லைப்
எனும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்
கிழக்கு பல்கலைக்கழக பதில் பணிப்பாளர் ரோகினி புவனசிங்கம் தலைமையில்
இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட
அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் சிறப்பு அதிதிகளாக , மாநகர முதல்வர் தியாகராஜா
சரவணபவன் ,கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக
பணிப்பாளர் ஜெய்சங்கர் , வலயக்கல்வி அலுவலக கல்விப் பணிப்பள்ளர் சுஜாதா
குலேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளின் மாணவர்கள் , பழைய மாணவர்கள்
கலந்துகொண்டனர்
