போதையற்ற
நாட்டை காட்டி எழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் போதைப்பொருளுக்கு எதிராக
செயல்படுவோம் சத்திய பிரமாண நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக போதையற்ற நாட்டை காட்டி எழுப்பும் தேசிய
வேலைத்திட்டத்தின்தேசிய நிகழ்வு நாடளாவிய ரீதியில் அனைத்து அரச திணைக்களங்கள்
மற்றும் தனியார் நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டது
இதன் பிரதான
நிகழ்வானது ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற வேளையில்
அதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தலைமை காரியாலயத்தில் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்
நிகழ்வு இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் என் எஸ்
.மென்டிஸ் தலைமையில் நடைபெற்ற சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்
நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் தலைமை காரியாலய பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அலுவலக
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
