ஜோர்தானிலுள்ள பலஸ்தீனியர்களின் அகதி முகாமொன்றில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
லிபிய தேசிய மாநாட்டை நடத்தும் முனைப்பில் ஐ.நா. ஈடுபட்டுள்ள நிலையில, அரசுக்கு எதிராக போராடிவரும் புரட்சிகர லிபிய இராணுவத்தின் தளபதி காலிஃபா ஹிப்தரின் படைகள் தலைநகரில் சண்டையிட்டு வருகின்ற நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
காலிஃபா ஹிப்தரின் இராணுவ நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருவதோடு, அதனை முறியடிக்கும் முயற்சியில் லிபிய அரச படைகள் நாலாபுறமும் தாக்குதல் நடத்திவருகின்றன.
மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறுவதாக லிபிய பிரதமர் ஃபயெஸ் அல் செராஜ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் லிபிய சர்வதேச விமானநிலையத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக காலிஃபா ஹிப்தரின் படைகள் தெரிவித்துள்ளன. இந்நடவடிக்கைக்கு லிபிய பிரதமர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
சமாதானத்தை நோக்கியே தமது கரங்கள் முன்செல்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், எனினும் எதிர்த்தரப்பினர் தாக்குதல் நடத்திவருவதாக குறிப்பிட்டுள்ளார். அதனை முறியடித்து, மேலும் பலத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம் என பிரதமர் கூறியுள்ளார்.
காலிஃபா ஹிப்தரின் படைகளும் அரச படைகளும் தலைநகர் திரிபோலியில் தொடர்ச்சியாக போரிட்டு வருகின்ற நிலையில், நினைப்பதைவிட மோசமாக தற்போது திரிபோலியின் நிலை உள்ளதென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.