ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் தாமதம் குறித்து கருத்து தெரிவித்த ஹண்ட் கூறியபோது;
‘பாராளுமன்றத்தில் தற்போது பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ள காலஅவகாசத்தில் பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெறமுடியுமென நான் நம்புகிறேன்.
பிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றே நாடு முழுவதிலுமுள்ள மக்களும் வர்த்தகர்களும் விரும்புகின்றனர்.
இந்த பிரச்சினை மிகநீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் நீடிப்பு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர உதவுமென நான் நம்புகிறேன்’ என ஹண்ட் தெரிவித்துள்ளார்.