பிரெக்ஸிற்றை ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் தனது ஒப்பந்தத்துக்கு ஆதரவைப் பெறும் நோக்குடன் பிரதமர் தொழிற்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சியுடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது எளிதான செயலாக அமையாது எனவும் இருதரப்பும் சமரசம் செய்வதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனாலும் அரசியல் ரீதியாக அது சவாலானதாக அமையுமென சுட்டிக்காட்டிய பிரதமர் பாராளுமன்றத்தில் நிலவும் தடையை முறியடித்து மக்கள் வாக்களித்ததை வழங்குவதற்காக இருதரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.