அவுஸ்ரேலிய குடிமகனான ஜுலியன் அசாஞ் 2006ம் ஆண்டு ஐஸ்லாந்தில் விக்கிலீக்ஸ் என்ற இந்த இணையத்தளத்தை ஆரம்பித்து இலாப நோக்கமற்று ஊடகம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்.
ஜுலியன் அசாங்கே சிறுவயதிலேயே இணைய ஹக்கிங்கில் ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர்.
அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல ஆவணங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார்.
இதனை அடுத்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அவரை மனித உரிமையாளர்கள் பாராட்டினார்கள்.
இதன் பின்னர் 2010ம் ஆண்டு சுவீடனில் பாலியல் குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டது இதுவும் அவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழி என அவர் மறுத்திருந்தார்.
அச்சுறுத்தல் காரணமாக தொடர் பயணங்களிலேயே இருந்து வந்த அவர், ஒபாமா முதல் கிலாரி வரையான அனைத்து தலைவர்களது ஆவணங்களும் வெளியிட்டு அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்கவும் காரணமாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் குற்றத்திற்காக சுவீடன் அரசினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ஈக்குவடோர் அகதி அந்தஸ்து இருந்தமையால் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.
இதன் பின்னர் லண்டனில் அரசியல் அகதி அந்தஸ்து கேட்டிருந்தார். ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டு லண்டன் பொலிஸாரால் ஏழு வருடங்களின் பின்னர் இன்று தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான ஜுலியன் அசாஞ் அண்மை நாட்களாக உடல்நலக்குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது இணையத்தள கணக்குகள் சுவிஸ் வங்கி கணக்குகள் அனைத்தும் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.