சென்னை, சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமான குறித்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களதடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக அந்த அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பார்தீ பட்டேல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் தாஹீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 71 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்குத் தடுமாறியது. இதில் ஷேன் வொட்சன் ஓட்டங்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தார்.
இதையடுத்து நிதானமாக துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தனது வெற்றியிலக்கை அடைந்தது.
சென்னை அணி சார்பில் அம்பதி ராயுடு 28 ஓட்டங்களையும் சுரெஷ் ரெய்னா 19 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 13 பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பெங்களூர் அணி சார்பில் ஷாகல், மொயின் அலி மற்றும் மொகம்மட் ஷிராஜ் ஆகியோர் தலா ஒவ்வாரு விக்கெட்டை கைப்பற்றினர்.






