உறியடி படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இயக்குநர் விஜயகுமார், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்பாளராகவும் இணைகிறார் விஜய்குமார்.
உறியடி படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் நாயகனாக விஜய்குமார் நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார்.
‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ‘உறியடி’யில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்த ’96’ படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் (அறிமுகம்) இந்தப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
சமூகத்துக்கு தேவையான ஒரு தகவலுடனும் பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இப்படம் உருவாகி வருகின்றது.






