LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

ஆளுநர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்


கிழக்குமாகாண ஆளுநர் எம் எல் எ எம் ஹிஸ்புல்லா  ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை இன்று  மேற்கொண்டார்


கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவரும் ,முன்னாள் சுகாதார அமைச்சருமான எம் எஸ் சுபைர் அழைப்பின் பேரில் கிழக்குமாகாண ஆளுநர் எம் எல் எ எம் ஹிஸ்புல்லா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயத்தை  மேற்கொண்ட ஆளுநர் வைத்தியசாலையில் சிகிட்சை பெற்று வரும் நோயாளர்களை , வைத்தியசாலை கட்டிடங்களையும் பார்வையிட்டடதுடன்  நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் கேற்றரிந்துகொண்டார்

வைத்தியசாலையின் பிரதான மணடபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநரிடம் வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறை , கட்டிடங்களின் தேவைப்பாடுக போன்ற பல்வேறு விடயங்கள காணொளி மூலம் காண்பிக்கப்பட்டு , அதன் தேவைப்பாடுகள் தொடர்பான ஆவணங்களும் ஆளுநரிடம் வைத்தியசாலை அத்தியட்சகரினால் கையளிக்கப்பட்டது

வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் நாலிங்கம் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராசாங்க அமைச்சர்  அலி சாஹிர் மௌலானா , ,தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை தலைவர் இசட் எ . நசீர் அஹமட் , முன்னாள் உற்பத்தி திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எ எச் எம் .அன்சார்,  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ் . அருள்குமரன் ,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி எல் எம் . நவரட்ணராஜா , , ஏறாவூர் நகர சபை தவிசாளர் அப்துல் வாசித் , ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் , நாகமணி கதிரவேல் , வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் ,தாதிய உத்தியோகத்தர்கள் , ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்












 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7