LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

மட்டக்களப்பு அமிர்தகழி மகா மாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நிகழ்வு


 மட்டக்களப்பு  அமிர்தகழி பகுதியில் பழமை வாய்ந்த ஆலயமாக விளங்கும் அமிர்தகழி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் புனர்த்தாபனம் செய்யப்பட்டு ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வுகள் கடந்த 20 ஆம் திகதி   முதல் பூர்வாங்க கிரிகைகளை ஆரம்பமாகி  இன்று  கும்பாபிஷேக  விஞ்ஞாபன  மிக சிறப்பாக நடைபெற்றது
 

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வை முன்னிட்டு எண்ணெய் மற்றும் பாலக்காப்பு  சாத்தும்  நிகழ்வுகள்  நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்று ஆலயத்தின்  கும்பாபிஷேக  விஞ்ஞாபன இன்று நடைபெற்றது

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய   அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .
இதனை தொடர்ந்து ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக நடைபெற்றது .

பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன பிரதம குரு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதம குரு வேதாகம் உதயசூரியன் சக்கரவர்த்தி சிவாகம  சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜன் குருக்கள்  தலைமையில் நடைபெற்ற  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர் .

















  
 



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7