LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் மட்டக்களப்பு திருவிழா

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சத்தின் 4ம் நாள் திருவிழாவாக மட்டக்களப்பு மாவட்ட திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் 4ம் நாள் மட்டக்களப்பு மாவட்ட திருவிழா இடம்பெற்றதுடன், எதிர்வரும் 7ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூசையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், கே.துரைரெட்ணசிங்கம், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு இந்து மக்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது யாக பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி வீதி வலம் வருதல் என்பன இடம்பெற்றதுடன், பூசைகள் யாவும் ஆலய பிரதம குருவினால் இடம்பெற்றது.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7