தேர்தல் விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (புதன்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் கட்சியின் நலன், பொதுமக்களின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே குறித்த முடிவினை எடுத்துள்ளேன்.
தேர்தலின் பின்னர் ஏதாவது தொகுதி வெற்றிடமானால் நான் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுப்பேன். இந்த விடயத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள மெகா கூட்டணியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.
இந்த விடயத்தில் என்னுடைய தனிப்பட்ட வெற்றியைவிட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி மிகவும் முக்கியமானது” என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.






