இவரை லண்டன் பொலிஸார் இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர். அதேநேரம், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமுலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பணமோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடுகடத்தும்படி பிரித்தானிய அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் கடன்பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றதை அடுத்தே, அவரை கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்போது தப்பியோடிய நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
இது தொடர்பாக அமுலாக்கத்துறை சார்பில் பிரித்தானியா உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






