கர்தார்பூர் எல்லைப் பகுதி திறக்கப்படுவதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்பு மேம்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.அதேநேரம், அனைத்து எல்லைப் பகுதிகளும் விரைவில் திறக்கப்பட வேண்டும் என கூறினார். இதன்மூலம் இருநாடுகளின் பொருட்களும், மக்களும் எளிதில் சென்று வர முடியும்
இதனால் இருநாடுகளிடையிலான வெறுப்புணர்வு குறைந்து சகோதரத்துவம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மேடி மேற்கொண்டு வரும் பிரசாரம், தமது நாட்டின் வரலாற்றிலேயே பிரதமரே காவலனாக இருப்பது இதுதான் முதல்முறையாகும்.
இதனால் தான் இன்றும் மெஹூல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி போன்றவர்கள் நாட்டிலிருந்து ஆயிரம் கோடிகளில் கொள்ளையடித்து தப்பிச் செல்வது நடந்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.





