இவ்விடயம் தொடர்பாக டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இனி காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி குறித்துப் பேசமாட்டோம். காங்கிரஸை பொறுத்தவரை தனது கூட்டணியைப் பலவீனமாக்கி வருகிறது. அவர்களுடன் பேசுவதால் இனி எந்தப் பலனும் இல்லை.
பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவில் எமக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை.
டெல்லியின் முக்கிய தலைவரான ஷீலா தீட்சித்துடனான கலந்துரையாடலில் ஆம் ஆத்மியிடம் கூட்டணி வேண்டாம் என்று அவர் பிடிவாதமாகக் கூறுகின்றார்.
இனிமேல் இக்கூட்டணி குறித்து ராகுல் காந்திதான் முடிவு எடுக்க வேண்டும்” என அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






