ஒரு தலைவருக்கு ஆளுமை தகுதி இருந்தால் சிறந்த அறிவுத்திறன் கொண்டவரை மேலும் முன்னேற செய்ய வேண்டும், ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு செய்வதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அதிகார வர்க்கங்கள், ஊடகங்கள், அரசியல் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைகளை அழிப்பவராக பிரதமர் செயற்படுவதாகவும், இவ்வாறு தலைமை பண்புகளை அழித்தால் அது நாட்டிற்கே பேரழிவாகி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் போன்று அடிக்கடி நடந்துள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று மோடி குற்றம் சாட்டினார். ஆனால், இப்போது மோடி ஆட்சியிலும் அதுதான் நடந்துள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.






