இன்று (புதன்கிழமை) இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பில் பிரமோத் சாவத் அதிகூடிய வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
கோவாவின் முதல்வர் மனோகர் பரிக்கர் மறைந்த நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு இழுபறி நிலை நீடித்தது. இந்நிலையில், அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதன்காரணமாக பா.ஜ.க. நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்ததையடுத்து குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது 20 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் பா.ஜ.க பெரும்பான்மையை நிறுபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






