LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

உணவுக்காக போராடும் சிம்பாப்வே மக்கள்: சூறாவளியின் எதிரொலி

‘இடாய்’ சூறாவளியினால் நிர்க்கதியாகியுள்ள சிம்பாப்வே மக்கள் உணவு மற்றும் தங்குமிட வசதிக்காக தமது அரசாங்கத்திடம் போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

‘இடாய்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி கடந்த 14 ஆம் திகதி இரவு மொசாம்பிக் குடியரசை தாக்கிய நிலையில் அதனை தொடர்ந்து சிம்பாப்வேயை நோக்கி ஊடுருவியது. இதனால் சிம்பாப்வேயில் கிழக்கு சிமனிமணி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு 259 பேர் வரை உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கானோரின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ள நிலையில் இலட்சக்கணக்கானோர் இருப்பிடம் இன்றி நிர்க்கதியாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று முந்தினம் (வியாழக்கிழமை) சென்ற சிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் மக்களுக்கு போதுமான உணவு தேவைகள் பூர்த்தியாகி இருப்பதாக தெரிவித்தார்.

தெற்கு ஆபிரிக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அனர்த்தம் இதுவென ஐக்கிய நாடுகளால் குறிப்படப்பட்டுள்ள நிலையில் சீன உட்பட பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7