LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 24, 2019

சோமாலிய தலைநகரில் அல்-ஷபாப் தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

சோமாலியா அரசுக்கு சொந்தமான அமைச்சின் கட்டடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சர் சக்கர் இபுராஹிம் அப்தல்லாவும் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இத்தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சோமாலியா நாட்டில் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய அல்- ஷபாப் தீவிரவாத அமைப்பு முயற்சி செய்து வருகிறது. அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்த குழுவானது பல வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இம்மாதம் முதலாம் திகதி தலைநகர் மக்கா அல் முக்காரமாவீதியில் அல்- ஷபாப்பினால் இதேபோன்றொரு தற்கொலை கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7