போயிங் 737 மக்ஸ் ரக விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான சான்றிதழை வழங்கும் வரையில் அதனை கொள்வனவு செய்யப்போவதில்லை என வெஸ்ட் ஜெட் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 6 மாதங்களில் இடம்பெற்ற விபத்துக்களை அடுத்து 49 மக்ஸ்-8 விமானங்களில் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முன்பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் குறித்த ரக விமானங்கள் 37 இனை கொள்வனவு செய்ய கல்கரியை தலமாக கொண்டு இயங்கும் வெஸ்ட் ஜெட் எயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்திருந்தது.
குறிப்பாக ஏற்கனவே 11 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் மேலதிகமாக 2 விமானங்களை பெற்றுக்கொள்ள குறித்த நிறுவனம் தீர்மானித்தது.
இந்நிலையில் குறித்த விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான சான்றிதழை வழங்கிய பின்னர் குறித்த விமானங்களை கொள்வனவு செய்து சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என அந்நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் லோரன் ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.





