இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள குரா ராய் ((Ngurah Rai)) விமான நிலையத்தில் ரஷ்ய பயணியை அதிகாரிகள் சோதனை நடத்திய போடுது குரங்கு கடத்தப்பட்டமை தெரிவித்துள்ளது. குறித்த நபரின் சூட்கேஸை எக்ஸ் ரே மூலம் பரிசோதனை செய்தபோது அதில் உயிருள்ள விலங்கு இருப்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் 2 வயதான அரியவகை ஓராங்-உட்டான் குரங்கு குட்டி இருந்துள்ளது.
இதையடுத்து குரங்கை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைக் கடத்திச் சென்ற ரஷ்யாவைச் சேர்ந்த செஸ்ட்கோ அன்றெய் ((Zhestkov Andrei)) என்பவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கடும் தண்டனையை எதிர்கொள்ள நேரும் என தெரிவிக்கிப்படுகின்றது.






