LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 25, 2019

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்தது இத்தாலி

சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டது. சீனா-இத்தாலிக்கிடையில்  5 முதல் 7 பில்லியன் யூரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இத்தாலி பிரதமர் கியூசெப் கொன்டுடன் நேற்று (சனிக்கிழமை) விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ள நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது. இந்நிலையில் ஜி 7 அணியை சேர்ந்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் இத்திட்டத்தில் இணைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற நிலையில் இத்தாலியின் நேச நாடுகளும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7