வெரோனிக்கா எனப்படும் ஆபத்தான சூறாவளியினால் பில்பராவின் போர்ட் ஹெட்லண்ட் பகுதியில் கடும் காற்று மற்றும் அடைமழை ஏற்பட்டுள்ளதென அப்பகுதி வாழ் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பில்பராவில் உள்ள உலகின் மிகப் பெரிய இரும்பு ஏற்றுமதி மையத்துக்கு அருகாமையில் சுமார் 180 மில்லிமீற்றர் வேகத்தில் மழை பெய்துள்ளதோடு மணிக்கு 154 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான காலநிலை தொடர்வதால் அப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






