LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 25, 2019

மொரோக்காவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டம்: பொலிஸார் தண்ணீர் பிரயோகம்

மொரோக்காவில் போராட்டத்தை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மீது  பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நிரந்தர நியமனம், ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை முறையாக வழங்குமாறும் ஏனைய அரச ஊழியர்களை போன்றே தமக்கும் சலுகைகளை வழங்குமாறும் கோரி சுமார் 15000 ஆசிரியர்கள் மொரோக்கா நாட்டு நாடாளுமன்றம் முன்பாக நேற்று (சனிக்கிழமை) இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் களைந்து செல்லுமாறு கோரி பொலிஸார் கேட்டுள்ளனர். தமது போராட்டத்துக்கு தீர்வு கிட்ட வேண்டும் என ஆசிரியர்கள் குவிந்திருந்த நிலையில் அவர்கள் மீது இன்று தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொரோக்கா நாட்டில் தற்போது 240 000 ஆசிரியர்கள் சேவையில் இருப்பதோடு 2016 ஆம் ஆண்டில் 55000 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கோரிக்கைகை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் கடந்த மூன்று வாரங்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7