குறித்த கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாதென அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சி சின்னம் சான்றிதழ் படிவத்தில் கையொப்பம் மட்டுமே ஏற்புடையது என்ற விதிக்கு மாறாக, கைரேகையை ஏற்றுக் கொண்டதன் ஊடாக தேர்தல் அதிகாரி தவறு செய்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா சுயநினைவு இல்லாத நிலையில் எவ்வாறு கைரேகையை வைத்திருக்க முடியும்.
ஆகவே கைரேகை போலியானது என்ற அடிப்படையில் ஏ.கே. போஸின் வெற்றியை நீதிபதி இரத்து செய்துள்ளார்.
இதேவேளை ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
ஆகவே இவ்விடயத்தில் விசாரணை அவசியம்” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.






