தருமபுரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தி.மு.க.வின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடி, ‘நானும் காவலன்’ என்ற பதத்தினை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தங்களின் பெயருக்கு முன் சவுகிதார் (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு கருத்து தெரிவிக்கும் வகையிலேயே ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் நடைபெறும் மதவாத தீய சக்திகள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்கள். மக்களுக்கு விரோதமான தமிழக அரசின் செயற்பாடுகள் அனைத்துக்கும் பிரதமர் மோடியே காவலாளியென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.






