எதிர்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் அக்கட்சிகளுக்கிடையிலான கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் காங்கிரஸ் 11 தொகுதிகளைத் தமக்கு ஒதுக்குமாறு கோரியிருந்த நிலையில், 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுமென ராஷ்டீரிய ஜனதா தளக் கட்சி கூறிவந்தது.
அந்தவகையில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுவதுடன், காங்கிரசுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாரதிய ஜனதாக் கூட்டணியிலிருந்து பிரிந்த உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டீரிய லோக் சாம்தா கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பிற உதிரிக் கட்சிகளுக்கு எஞ்சியுள்ள தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






