அரக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார். இதனால் போட்டியிடும் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.
கிஷோர் சந்திரதேவ், மத்தியில் முன்னாள் மன்மோகன் சிங் ஆட்சியில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவர், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.






