சண்டீகாரில் இருந்து பயணிகள் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில் வட.சண்டீகாரில் இருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு செல்லும் வழியில் டிப்ரூக்கிறா என்ற இடத்தில் தீப்பரவிலிற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலிற்கு மின்ஒழுக்கே காரணமென ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவிபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சண்டீகார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






